Tuesday, 23 October 2012

முந்திரி சிக்கன் கிரேவி

DSCN0200-1024x768 



Ingredients

  • சிக்கன் - அரை கிலோ
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 7 பல்
  • காய்ந்த மிளகாய் - 5
  • சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
  • மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
  • முந்திரிபருப்பு - 10
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - சிறிதளவு

Method

Step 1

சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு மிளகாய், முந்திரிபருப்பையும் அரைக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சிக்கனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியையும் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

Step 2

அதன்பிறகு அரைத்த மிளகாய், சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு வதக்கிவிட்டு பின்பு அதில் சிக்கனையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு போடவும். அதன் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடவும். சிக்கன் வெந்ததும் அரைத்த முந்திரிபருப்பை அதில் போட்டு கிளறவும். கெட்டியாகும் வரை கிளறவும். சூடான முந்திரி சிக்கன் ரெடி

http://manakkumsamayal.com/

1 comments:

looks very yummy.
http://recipeshindi.com/

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More