Ingredients
- துவரம் பருப்பு - 150 கிராம்
- வெங்காயம் - 2
- தேங்காய் துருவல் - அரை மூடி
- காய்ந்த மிளகாய் - 20
- பெருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- கொத்தமல்லி தழை - தேவையான அளவு
Method
Step 1
முதலில்
துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதை மிக்ஸியில் கெட்டியாக
அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பெருஞ்சீரகம், சீரகம், காய்ந்த
மிளகாய், தேங்காய் துருவல் இவை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
Step 2
அதன்
பிறகு பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை இவை மூன்றையும் நைசாக
நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு அரைத்த துவரம் பருப்புடன் அரைத்த
மசாலா, உப்பு, மஞ்சள் தூள்,வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை
ஆகியவற்றை கலந்து, பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். ஒரு
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அந்த உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுத்து
சாப்பிடவும்.
சூப்பரான வெஜிடபிள் கோளா உருண்டை ரெடி
http://manakkumsamayal.com
0 comments:
Post a Comment